சிங்கப்பூரில் தீவிரவாத செய்திகள்,சித்தாந்தங்களைப் பரப்பும் சில இணையத்தளங்களுக்குத் தடை விதிக்கப்படும்!

சிங்கப்பூரில் இளையர்களையும் தீவிரவாத உள்ளடக்கத்தையும் அடையாளம் தெரிந்துகொள்ள என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹொன் வெங் கேள்வி எழுப்பினார்.இளையர்கள் சமூகவழி மூலமும், இணைய விளையாட்டுகள் மூலமும் தீவிரவாத போக்கிற்கு ஈர்க்கப்படுவதைக் குறிப்பிட்டார்.

இதற்கு உள்துறை,தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகமது ஃபைசல் இப்ராஹிம் பதிலளித்தார்.

தீவிரவாத செய்திகளையும்,கருத்துகளையும் பரப்பும் சில இணையத்தளங்களைச் சிங்கப்பூர் அரசாங்கம் தடைச் செய்ய உள்ளது என்று கூறினார்.

கடந்த மாதம் முதல் தேதியில் திருத்தப்பட்ட ஒலிபரப்புச் சட்டம் நடப்புக்கு வந்தது.இச்சட்டத்தின்கீழ் தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திற்கு தீவிரவாதம் அல்லது வன்முறையைத் தூண்டும் வகையில் இருக்கும் உள்ளடக்கத்துக்குத் தடை விதிக்க அதிகாரம் இருக்கிறது.

தகவல், தொடர்பு அமைச்சகம் இணைய விளையாட்டுகள்,செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதற்கான தளங்கள் போன்ற சேவைகளில் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.

உள்துறை அமைச்சகம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இணையத்தில் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான சட்டம் அறிமுகம் காணும் என்று கூறினார்.

இதில் பயங்கரவாத தொடர்பான செயல்களைத் தூண்டிவிடும் உள்ளடக்கமும் அடங்கும் என்று சொன்னார்.

இது போன்று நடவடிக்கைகள் எடுத்தாலும் புதிய தளங்கள் உருவாகிக் கொண்டே தான் இருக்கும்.

அனைத்து தீவிரவாத உள்ளடகத்துக்கும் தடை விதிப்பது சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

அரசாங்கம் இவற்றைத் தடுக்க விடாமல் செய்யும் வழிகளைத் தனிநபர்கள் தொடர்ந்து ஆராயக் கூடும் என்று கூறினார்.