தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!!

தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்...!!!

உலகில் பல்வேறு உயிரினங்கள் இருக்கின்றன. அதிலும் சில உயிரினங்களை பார்த்தால் சிலர் தெரிந்து ஓடுவார்கள்.அந்த வகையில் மழைக்காலங்களில் அதிகம் காணப்படும் தவளையை பார்த்தால் சிலருக்கு பிடிக்காது. அதன் சத்தம் மற்றும் அதன் தோல் பகுதி பார்ப்பவரை முகம் சுளிக்க வைக்கும்.ஆனால் அதே தவளையை இந்தோனேசியா, சைனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் உணவாகவும் உட்கொள்கின்றனர்.அத்தகைய தவளை பற்றிய சில தகவல்களை இங்கு பார்ப்போம்..

🐸 ஆப்பிரிக்காவில் உள்ள Goliath frog தான் உலகிலேயே மிக அதிக எடையுள்ள தவளையாகும். இதன் எடை கிட்டத்தட்ட ஆறு கிலோ வரை இருக்கும். இது எலிகள் மற்றும் வாத்துகளை கூட உணவாக உட்கொள்கிறது.

🐸 கண்ணாடி தவளையின் உடல் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது. அதன் தோல் மூலம் உள்ளுறுப்புகள் மற்றும் தசைகளை பார்க்க முடியும்.

🐸 சிவப்பு நிற கண்கள் கொண்ட தவளைக்கு மூன்று இமைகள் உள்ளன.

🐸 தவளை அதனுடைய உடல் அளவை விட 20 மடங்கு நீளமாக தாவக்கூடியது.


🐸 மரத்தில் வாழும் தவளைகளுக்கு கால்களில் பசை போல் ஒட்டும் தன்மை இருக்கிறது.

🐸 சிறிய Golden frog தவளைக்கு 10 மனிதர்களை கொல்லக் கூடிய விஷத்தன்மை உள்ளதாம்.

🐸 வட அமெரிக்காவில் வாழும் Rana Sylvatica எனும் தவளையானது குளிர்காலத்தில் உடலின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி உயிரற்றது போல் இருக்குமாம்.

🐸 தென் அமெரிக்காவில் வாழும் ஆண் தவளைகள் அதன் தலைப்பிரட்டைகளை விழுங்கி அவை வளர்ந்த பின் வெளியே விடுகிறது.

🐸 மெழுகு குரங்கு தவளையின் கழுத்தில் இருந்து மெழுகு போன்ற திரவம் சுரக்கிறது. அந்த மெழுகை அதன் கால் வைத்து உடல் முழுவதும் தேய்த்து சூரிய ஒளியில் இருந்து தன்னை பாதுகாக்கிறது.

🐸 தவளையின் கண்ணை விட காது குழாய் பெரியதாக இருந்தால் அது ஆண் தவளை என்றும் அதுவே காது குழாய் சிறியதாக இருந்தால் அது பெண் தவளை என்றும் அறியப்படுகிறது.