ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்…!!

ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்...!!

ஒட்டகம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சவாரி செய்ய ஆசைப்படும் விலங்குகளில் ஒட்டகமும் ஒன்று.ஒட்டகங்கள் பாலைவனங்களில் மனிதர்களை ஏற்றச் செல்லவும் சுமைகளை சுமந்து செல்லவும் பயன்படுகிறது. இதனால் பாலைவனங்களில் மக்கள் ஒட்டகத்தை அவர்களின் குடும்ப உறுப்பினராகவே கருதுகின்றனர். இதனால் ராஜஸ்தான் அரசு, ஒட்டகங்கள் மக்களுக்கு ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22 ஆம் தேதி உலக ஒட்டக தினமாக கொண்டாடுகிறது.

🐪 ஒட்டகம் பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த விலங்காகும்.

🐪 ஒட்டகம் ‘பாலைவனத்தின் கப்பல்’ என்று அழைக்கப்படுகிறது.

🐪 ஒட்டகம் என்ற அரேபிய சொல்லிற்கு அழகு என்று பொருள்படும்.

🐪 ஒட்டகத்தின் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 50 ஆண்டுகள் ஆகும்.

🐪 ஒட்டகத்தின் உடல் எடை 300 முதல் 1000 கிலோ வரை இருக்கும்.


🐪 ஒட்டகம் நீரில்லாமல் பல நாள் வாழக்கூடியது.

🐪 ஒட்டகத்திற்கு மூன்று கண் இமைகள் உள்ளன.

🐪 ஒட்டக பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் உள்ளன.

🐪 ஒட்டகங்கள் ஒரே நேரத்தில் 200 லிட்டர் வரை தண்ணீர் வரை குடிக்கும்.

🐪 ஒட்டகங்களில் ஒரு திமில் மற்றும் இரண்டு திமில் கொண்ட ஒட்டகங்கள் உள்ளது.

🐪 அதில் இரண்டு திமில் கொண்ட ஒட்டகங்கள் அதிக சக்தி பெற்றவை.


🐪 ஒட்டகப் பாலில் வைட்டமின்கள்,தாதுக்கள், புரதங்கள் போன்றவை அதிகமாக இருக்கிறது.

🐪 ஒட்டகம் சுமார் 200 கிலோகிராம் எடையை சுமந்து கொண்டு 50 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கக் கூடியது.

Follow us on : click here : ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan