இன்று வீட்டிலிருந்து வேலைச் செய்யும் போக்கு பிரபலமாகிவிட்டது.ஒரு சில துறைகள் இவ்வாறு செய்ய முடியாத காரணத்தால் அதைச் சாத்தியமாக்க புத்தாக்க வழியில் முயன்று வருகின்றனர்.
வீட்டிலிருந்து வேலைச் செய்வது உணவு, பானக் கடைகளில் வேலை செய்பவர்களுக்கு சிரமம்.
அவர்களுக்கு கைக்கொடுக்க Starbucks உள்ளிட்ட பெரிய உணவு, பானக் கடைகள் செயலி ஒன்றை அறிமுகம் செய்தது.கடந்த நவம்பர் மாதத்தில் Find-a-shift எனும் செயலியை அறிமுகம் செய்தது.
சுமார் 60 விழுக்காட்டினர் Starbucks கடையில் வேலைச் செய்யும் முன்னிலை ஊழியர்களில் பகுதிநேர ஊழியர்கள்.
ஊழியர்கள் சிலரால் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு வர முடியவில்லை என்றால் மற்ற ஊழியர்கள் அந்த நேரத்தில் வேலைச் செய்ய முன் வரலாம்.
இதுவரை சுமார் 20 விழுக்காட்டினர் Find-a-shift செயலி மூலம் பகுதிநேர ஊழியர்கள் பயனடைந்துள்ளனர்.
இருந்தாலும் அனைவருக்கும் வீட்டிலிருந்து வேலைச் செய்யும் வழக்கம் பொருந்தவில்லை.
கிட்டத்தட்ட 300 க்கும் அதிகமான ஊழியர்கள் ஒரு நிறுவனத்தில் இயந்திரங்களைக் கையாள்கின்றனர்.எனவே நிறுவனம் புதிய திட்டத்தை சோதித்து வருகிறது.
கூடுதல் வேலைச் செய்யும் ஊழியர் மற்றொரு நாளில் விடுப்பாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்தது.
வேலைகளும், வர்த்தகங்களும் உருமாறுவதால் வீட்டிலிருந்து வேலைச் செய்யும் போக்கு வெகு தூரத்தில் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.