பாம்பைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்…!!!

பாம்பைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்...!!!

பாம்பை கண்டால் படையே நடுங்கும் … என்ற பழமொழி உண்டு. பாம்பு என்றால் யாருக்குத்தான் பயம் இருக்காது.அதிலும் சில பாம்புகளின் விஷங்கள் உயிரையே பறிக்கக்கூடிய வீரியம் கொண்டது. அதே பாம்புகளின் விஷங்கள் மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் 230 வகையான பாம்பினங்கள் உள்ளது. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுத்தன்மை உள்ளது.பாம்புகள் தன் இரையை வேட்டையாடுவதற்காக விஷயத்தைப் பயன்படுத்துகின்றன.பாம்பு தன் பற்களால் இரையைக் கடிக்கும்போது, ​​பாம்பின் பற்களுக்குப் பின்னால் உள்ள நச்சுப் பையில் இருந்து விஷம் வெளியேறி, இரையின் உடலில் நுழைந்து அதைக் கொன்றுவிடும்.இத்தகைய தன்மை கொண்ட பாம்புகளை பற்றிய சில விவரங்கள்..


🔶️ பாம்புகளின் மொத்தம் 3600 இனங்கள் உள்ளதாம்

🔶️ அதில் சுமார் 600 இனங்கள் மட்டுமே நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது.

🔶️ பாம்பிற்கு 200 முதல் 400 க்கும் மேற்பட்ட முதுகெலும்புகள் உள்ளதாம்.

🔶️ பாம்பின் ஆயுட்காலம் 20 முதல் 30 ஆண்டுகள் ஆகும்.

🔶️ சாதாரண பாம்பு 150 கிலோ முதல் 330 பவுண்டுகள் வரை எடை கொண்டதாக இருக்கும்.


🔶️ பாம்புகளுக்கு இடது நுரையீரல் அளவில் சிறியதாக இருக்குமாம் சில பாம்புகளுக்கு இல்லாமலும் இருக்குமாம்.

🔶️ கருப்பு மாம்பா உலகிலேயே மிக விரைவாக ஊர்ந்துச் செல்லக்கூடிய பாம்பினம்.

🔶️ உலகிலேயே நீளமான பாம்பாக கருதப்படும் இராஜ நாகம் 22 அடிவரை வளரக்கூடியது.

🔶️ இராஜநாகம் மற்ற பாம்புகளை மட்டுமே உணவாக உட்கொள்ளக் கூடியது.

🔶️ பாம்புகள் அதன் முட்டைகளுக்கு அதிக பாதுகாப்பு தருவதில்லை.


🔶️ மண் பாம்புகள்,கட்டுவிரியன்கள் போன்ற பாம்புகள் மட்டும் குட்டி போடுகின்றன.

🔶️ பாம்புகளில் குருட்டுப் பாம்பு மட்டும் ஆணில்லாமல் கருவுறுகின்றன.

🔶️ ரீனல் பாம்புகள் தரையில் இலையைக் கூடாக கட்டி அதில் முட்டையிடுகின்றன.

🔶️ சாரைப்பாம்பு, பச்சை பாம்பு, கொம்பேறி மூக்கன், ஆனைக் கொன்றான், வட அமெரிக்க கார்ட்டர் பாம்பு போன்றவை நச்சுத்தன்மை அற்றவை.


🔶️ ராஜநாகம், இந்திய நாகம், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன், கருப்பா மாம்பா, பச்சை விரியன் போன்ற பாம்புகள் அதிக நச்சுத்தன்மை கொண்டவை.

🔶️ பாம்புகளுக்கு உண்மையில் காது இல்லை. ஆனால் தாடை எலும்புகளில் இருக்கும் ஒருவித இணைப்புகளால் அதிர்வுகளை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவை.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan