சிங்கப்பூர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்…..

சிங்கப்பூர் அனைவரையும் வசீகரிக்கும் ஒரு நகரமாகும். இது நவீனத்துவம் மற்றும் பாரம்பரியத்தின் கலவையாகும். சிங்கப்பூர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

Gardens by the Bay பூங்கா எதிர்கால supertree கட்டமைப்புகள், மேகக் காடுகள் மற்றும் Flower dome ஆகியவற்றை கொண்டுள்ளது. இது நிலையான நகர்புறத் திட்டம் மற்றும் வடிவமைப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Marina Bay Stands ஒரு ஹோட்டல் மற்றும் பொழுதுபோக்கு வளாகம். ஆச்சரியமூட்டும் Rooftop infinity pool, நகரின் பரந்த காட்சிகள் கொண்ட Sky park மற்றும் கலகலப்பான Casino இதன் பெருமையை கூறும்.

Little India, Chinatown மற்றும் Arab street ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான சூழ்நிலை, உணவு வகைகள் மற்றும் பாரம்பரியத்தை வழங்குகின்றது. சிங்கப்பூரின் பல்வேறு கலாச்சாரம் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சிங்கப்பூரின் பிரபலமான Lau Pa Sat மற்றும் Maxwell Food Centre போன்ற Hawker centers-ல் பலவிதமான சுவையான மற்றும் உள்ளூர் உணவுகளை நியாயமான விலையில் சுவைக்கலாம்.

Sentosa Island ஒரு Resort island. சிங்கப்பூர் யுனிவர்சல் ஸ்டுடியோஸ், S. E. A Aquarium மற்றும் அழகான கடற்கரைகள் உள்ளிட்ட பல அம்சங்களை இது வழங்குகின்றது.

சிங்கத்தின் தலையையும் மீனின் உடலையும் இணைக்கும் Merlion, சிங்கப்பூரின் சின்னமாகும். Merlion பூங்கா, City skyline-ன் சிறந்த காட்சிகளை வழங்குகின்றது.

சிங்கப்பூர் Zoo மற்றும் Night Safari, ஒரு உலக தரம் வாய்ந்த வனவிலங்கு பூங்காவாகும். இங்கு பார்வையாளர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் இயற்கையான சூழலில் விலங்குகளை பார்த்து ரசிக்க முடியும்.

Peranakan மியூசியம், Peranakan பாரம்பரியம் மற்றும் Straits Chinese கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றது.

சிங்கப்பூர் அதன் தூய்மை, திறமையான பொது போக்குவரத்து மற்றும் பசுமையான இடங்களுக்கு பெயர் பெற்றது. சிங்கப்பூர் பெரும்பாலும் Garden City என்று குறிப்பிடப்படுகின்றது.

Orchard Road ஏராளமான Malls மற்றும் Boutiques-களை உள்ளடக்கிய ஒரு shopping Paradise. இங்கு luxury brand முதல் local designer goods வரை அனைத்தும் கிடைக்கும்.

உலகிலேயே பாதுகாப்பான நகரங்களில் ஒன்றான சிங்கப்பூர், பயணிகளுக்கு சிறந்த இடமாக விளங்குகின்றது.

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு, தீபாவளி மற்றும் ஹரிராயா போன்ற பல்வேறு கலாச்சார விழாக்கள் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன.

சிங்கப்பூரை ஒரு தனித்துவமான மற்றும் வசீகரிக்கும் இடமாக மாற்றும் பல சுவாரஸ்யமான விஷயங்களில் இவை சில மட்டுமே.

சமையல், கலாச்சாரம் அதிநவீன கட்டிடக்கலை போன்றவற்றில் சிங்கப்பூர் சிறந்து விளங்குகின்றது.