சிங்கப்பூரில் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கான சில முக்கிய விதிமுறைகள்!!
சிங்கப்பூரில் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கான சில முக்கிய விதிமுறைகள்!!
சிங்கப்பூர் செல்பவர்கள் கண்டிப்பாக சிங்கப்பூரின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டே நடந்துக் கொள்ள வேண்டும்.
புதிதாக சிங்கப்பூர் செல்பவர்கள் சட்டத் திட்டம் தெரியாமல் தவறு செய்தால் அதற்கான தண்டனையும் நிச்சயமாக கிடைக்கும்.
அதனால் இந்த பதிவை நன்றாக படித்து தெரிந்து கொண்டு சிங்கப்பூரின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வது மிகவும் நல்லது.
1. நீங்கள் சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் பொழுது எந்த கம்பெனியில் வேலை கிடைத்து செல்கிறீர்களோ நிச்சயமாக அந்த கம்பெனியில் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும்.
2. வேலை அனுமதி அட்டையில் செல்பவர்கள் வேறு இடங்களில் பகுதி நேர வேலை(Part time job) செய்யக்கூடாது.
3. உங்கள் வேலை அனுமதி அட்டை காலாவதி ஆன பின்பு ஒரு நாள் கூட நீங்கள் சிங்கப்பூரில் தங்கக் கூடாது.
4. உங்களது வேலை அனுமதி அட்டையை தவறுதலாக நீங்கள் தொலைத்துவிட்டால் முதல் முறை அதற்கான அபராத தொகையை கட்டி நீங்கள் திரும்ப வேலை அனுமதி அட்டையை பெற முடியும். அதே தவறை திரும்ப செய்தால் நீங்கள் உங்கள் தாய்நாடு திரும்ப வேண்டியதுதான்.
5. உங்கள் வேலை அனுமதி அட்டையை புதுப்பிக்க நீங்கள் உங்கள் கம்பெனிக்கு எந்தவித பணமும் கொடுக்கத் தேவையில்லை.
Follow us on : click here