சிங்கப்பூரில் உள்ள சில முக்கியமான பழைய இடங்கள் பாதுகாக்கப்படும்!!
சிங்கப்பூரில் உள்ள சில முக்கியமான பழைய இடங்கள் பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியல் குறித்து தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
அதில் கென்ட்டனீஸ் கோவில் ஒன்றும்,ஆடம் பார்க்கில் உள்ள இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய 19 பங்களாக்களும் இடம் பெற்றுள்ளது.
கடந்த 35 ஆண்டுகளில் 7200 கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக லீ குறிப்பிட்டார்.
இவ்வாறு செய்வது நாட்டின் வரலாறு மற்றும் சமூகங்கள் மட்டுமல்லாமல் மக்களையும் நினைவுகூர உதவும் என நம்புகிறேன் என்றார்.
இதனை கட்டடக்கலை மரபுடமை விருதுகள் நிகழ்ச்சியில் லீ பேசினார்.
சிங்கப்பூரின் வரலாற்றைப் பாதுகாக்கும் வகையில் அதன் வளர்ச்சி திட்டங்களில் பாரம்பரிய அம்சங்களைக் குறிப்பிடத்தக்க அளவில் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.
சிங்கப்பூரில் நிலப்பற்றாக்குறை இருப்பதை லீ சுட்டிக்காட்டினார். அனைத்து கட்டடங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பது கடினமாக இருக்கும் என்பதால் வித்தியாசமான அணுகுமுறை முக்கியம் என்று கூறினார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official/profilecard/?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg