புறாக்கள் பற்றி யாரும் அறிந்திராத சில தகவல்கள்..!!!

உலகெங்கிலும் அதிகமாக காணப்படும் பறவைகளில் புறாவும் ஒன்றாகும். தூதுச் செல்லும் பறவையான புறா அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது.மன்னர் காலத்தில் தூது ஓலை அனுப்புவதற்கு புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. உலகப் போரில் புறா ஆற்றிய பங்களிப்பால் பல வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது.அப்படிப்பட்ட புறாக்கள் பற்றிய தகவல்கள் இதோ உங்களுக்காக..
🕊 மனிதன் வளர்க்கத் தொடங்கிய முதல் பறவை புறா.
🕊 தூது செல்லும் புறாக்களை ஹோமர் என்று அழைப்பார்கள்.
🕊 உலகில் மொத்தம் 344 வகையான புறாக்கள் உள்ளன.
🕊 புறாவின் சராசரி ஆயுட்காலம் 6 முதல் 8 ஆண்டுகள் ஆகும்.
🕊 புறா மணிக்கு 35 மைல் தூரத்திற்கு பறக்கக்கூடியது.
🕊 பறவைகளில் புறா மட்டுமே நீரை உறிஞ்சி குடிக்கும் தன்மை கொண்டது.
🕊 புறாக்கள் நிமிடத்திற்கு பத்து முறை தனது இறக்கையை திறந்து மூடுமாம்.
🕊 புறாக்களின் இதயம் நிமிடத்திற்கு 600 முறை துடிக்குமாம்.
🕊 ஒலிம்பிக் போட்டியின் தொடக்கத்தில் புறா பறக்க விடப்படுகிறது.
🕊 புறா சுமார் 16 மணி நேரம் ஓய்வில்லாமல் பறக்க கூடியது.
🕊 புறாக்கள் சுமார் 6000 அடி உயரம் வரை பறக்க கூடியது.
🕊 முதலாம் உலகப் போரிலும், இரண்டாம் உலகப் போரிலும் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன.
🕊 தமிழ்நாட்டின் மாநில பறவை மரகதப் புறா ஆகும்.
🕊 இரண்டாம் உலகப்போரில் புறா ஆற்றிய பங்களிப்புக்காக 32 புறாக்களுக்கு டிக்கின் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan