இன்று சிங்கப்பூரில் அரிய வகைச் சூரியக் கிரகணம்.
உலகின் ஒரு சில இடங்களில் பகுதி கிரகணத்தைக் காணலாம். சில இடங்களில் முழு கிரகணத்தைக் காணலாம்.
அது பூமியின் வட்ட வடிவினாலும் , நிலவின் வட்டப்பாதையாலும் வேறுபடுகிறது.
சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட சில இடங்களில் சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைந்திருக்கும்.
இன்று காலை 10.54 மணிக்கு தொடங்கியது.அதன் உச்சகட்டம் 11.55.அது பிற்பகல் 12.58 மணி வரை ஏற்பட்டது.
நிலவு சூரியனின் சுமார் 15 விழுக்காட்டை மட்டுமே மறைக்கும் என்று சிங்கப்பூர் அறிவியல் ஆணையம் கூறியது.
சூரிய கிரகணத்தை நேரடியாக பார்க்க வேண்டாம் என ஆணையம் கூறியது. நேரடியாக பார்த்தால் கண்கள் பாதிக்கப்படலாம் என்று கூறியிருந்தது.
Sunglasses போன்ற மூக்குக் கண்ணாடி மூலம் பார்ப்பதும் பாதுகாப்பானதல்ல என்றும் கூறியது.
கிரகணத்தை பார்ப்பதற்காக சிறப்புக் கருவிகளும் உள்ளன.