Latest Tamil News Online

மீண்டும் செயல்படத் தொடங்கும் சமூக நிலையம்!

சிங்கப்பூரில் காக்கி புக்கிட் வட்ட்டாரத்தை மேம்படுத்த திட்டம் வரையறுக்கப்படுகிறது. அதோடு அதன் சுற்று உள்ள பகுதிகளையும் மேம்படுத்த நீண்டகால திட்டங்கள் வரையறுக்கப்படுகிறது.

1980 – ஆம் ஆண்டில் காக்கி புக்கிட் வட்டாரம் கட்டப்பட்டது.இது குறித்து துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

2030-ஆம் ஆண்டுகளில் பாயா லேபார் ஆகாய படைத் தளம் மாறும்போது அந்த பகுதிகள் இன்னும் நன்றாகப் பயன்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.

அங்கு இன்னும் வெவ்வேறு புதுப்பிப்புப் பணிகள் காலப்போக்கில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆண்டின் பிற்பாதியில் மேம்படுத்தப்பட்டிருக்கும் சமூக நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கும் என்றும் கூறினார்.

இந்த தொகுதியின் 40-ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கலந்துக் கொண்டார்.

அதில் அந்த தொகுதியின் புதிய மாற்றங்கள் பற்றி கூறினார்.

அந்த நிகழ்ச்சியில் புத்தகம் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது.காக்கி புக்கிட்டின் குடியிருப்பாளர்களின் அனுபவங்களையும், வரலாற்றையும் நினைவு கூரும் புத்தகம்.