பொய்யான கணக்குகளை முடக்கும் சமூக ஊடகத் தளங்கள்!!

பொய்யான கணக்குகளை முடக்கும் சமூக ஊடகத் தளங்கள்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பொய்யான கணக்குகளை அடையாளம் கண்டு அதை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்கள் அரசு வழங்கிய அறிவுரையின்படி முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட போலி கணக்குகளை சில சமூக வலைத்தளங்கள் முடக்கத் தொடங்கியுள்ளன.

வெளிநாட்டு சொந்தமான 95 சமூக ஊடக கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அலுவலகம் அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

டிக்டாக் அரசாங்கத்தின் ஆலோசனையைப் பின்பற்றுவதாக நம்பப்படுகிறது.

அரசாங்கம் வழங்கிய அறிவுரைகளை மதிப்பாய்வு செய்து உள்ளூர் சட்டங்களை மீறும் ஊடகங்களை அகற்றுவதாக யூடியூப் தெரிவித்துள்ளது.

ஊடகத்தை அகற்றும் போது ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் வெவ்வேறு தேவைகள் இருப்பதாக யூடியூப் கூறியது.