சிங்கப்பூரில் இந்த 2023-ஆம் ஆண்டில் சமூக மேம்பாட்டு மன்றம் பற்றுச் சீட்டுகளை வழங்கியது.பற்றுச் சீட்டுகளைப் ஐந்து பேரங்காடிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.
தற்போது மேலும் இரண்டு பேரங்காடிகளில் பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சமூக மேம்பாட்டு மன்றம் அறிவித்துள்ளது. இனி Giant,Ang Mo முதலிய பேரங்காடிகளில் பயன்படுத்தலாம். வர்த்தக, தொழில் துணை அமைச்சர் Low Yen Ling அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பட்டியலில் NTUC Fairprice, Sheng siong, Prime, HAO mart, U stars ஆகிய ஐந்து பேரங்காடிகளில் பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்திருந்தது. தற்போது மேலும் இரண்டு பேரங்காடிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இதன் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.
பற்றுச் சீட்டுகளை இவற்றின் 360க்கும் அதிகமான கிளைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். பற்றுச் சீட்டுகளை குடியிருப்பு பேட்டைகளில் செயல்படும் 20,600 க்கும் அதிகமான சில்லரை வர்த்தக கடைகளிலும், உணவங்காடிகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பற்றுச் சீட்டுகள் ஜனவரி,3-ஆம் தேதியிலிருந்து 300 வெள்ளிக்கு வழங்கப்பட்டது.
இதனை சுமார் 1.1 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.132 மில்லியன் வெள்ளி மதிப்பிலான CDC பற்றுச் சீட்டுகள் ஒரு மாதத்திற்குள் குறைவான காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021, 2022-ஆம் ஆண்டுகளுடன் பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்திய குடும்பங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டதில் அதன் விழுக்காடு அதிகரித்துள்ளது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 30 நாட்களில் 15 விழுக்காடு கூடுதல் குடும்பங்கள் பெற்றுள்ளன.
பற்றுச் சீட்டுகளைப் குடும்பங்கள் பயன்படுத்தும் வேகம் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாக Low yen ling கூறினார்.சிங்கப்பூர் குடும்பங்களின் செலவீனத்தை குறைக்கவும் பற்றுச் சீட்டுகள் உதவி இருப்பதாக கூறினார். அதே போல், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது என்று கூறினார்.
இந்த திட்டத்திற்கு ஆதரவளித்த சிங்கப்பூர் குடும்பங்கள்,வணிகர்கள், உணவங்காடிக் கடைக்காரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இவ்வாறு முகநூலில் Low yen ling பதிவிட்டுள்ளார்.