சிங்கப்பூரில் இவ்வாண்டு சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச் சீட்டுகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெற்றுக் கொண்டுள்ளனர் என்று வர்த்தகத் தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் கூறியுள்ளார்.
பெற்றுக்கொண்டோர் எண்ணிக்கை சிங்கப்பூர் குடும்பங்களின் அடிப்படையில் பார்த்தால் 80 விழுக்காட்டிற்கு அதிகம். சமூக மேம்பாட்டு மன்ற பற்றுச் சீட்டுகள் மூன்றாவது முறையாக குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. ஜனவரி மாதம் 3-ஆம் தேதியிலிருந்து வழங்கப்பட்ட குடும்பங்களுக்கு மின்னிலக்க முறையில் விநியோகிக்கப்பட்டது.
சிங்கப்பூர் குடும்பங்கள் இத்திட்டத்தை மிகவும் வரவேற்கின்றனர் என்றும் கூறினார். அவர்கள் இதனைப் பெற்றுக் கொண்ட வேகத்தைக் கொண்டதன் அடிப்படையில் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் 100 வெள்ளி பற்றுச் சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால் இம்முறை 300 வெள்ளியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. பற்றுச் சீட்டுகளை குடியிருப்பு பேட்டைகளில் உள்ள கடைகள், 5 பேரங்காடிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் உணவகங்காடிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு,CNA938 வானொலியில் நடத்தப்பட்ட Tech Talk நேர்காணலில் தெரிவித்தார்.