கொடுக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட SOAT மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு!! Food Resilience Preparedness திட்டம் நிறுத்தம்!!

கொடுக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட SOAT மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு!! Food Resilience Preparedness திட்டம் நிறுத்தம்!!

முழுமைத் தற்காப்பு படை பயிற்சியின் போது வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பிறகு SOAT மாணவர்களுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது.இச்சம்பவத்தை தொடர்ந்து Food Resilience Preparedness திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் உணவு அமைப்பு,கல்வி அமைச்சகம்,ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு(AIC) மற்றும் உணவைத் தயாரித்த SATS நிறுவனம் ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து விசாரணை முடியும் வரை திட்டம் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிக்கை கூறியுள்ளது.

உணவைச் சாப்பிட்ட 20 SOTA மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல், வாந்தி ஏற்பட்டு நோய்வாய்ப்பட்டனர்.

ராணுவ பயிற்சியின் போது தேசியச் சேவையாளர்கள் உண்ணும் உணவைத் தயாரிப்பதில் அனுபவம் உள்ள SATS நிறுவனம் இந்த திட்டத்திற்கான உணவையும் தயாரிக்கிறது.

அவை சாதாரண தட்பவெப்ப நிலையில் உணவு கெட்டு போகாமல் சுமார் 8 மாதங்கள் வரை நீடிக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan