அட …கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா…!!

அட ...கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா...!!

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகள் இயற்கை உணவுகள். இந்த இயற்கை பொருட்களில் ஒன்றான கொய்யா மிகுந்த சுவை மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்த கனியாகும்.

கொய்யாவில் பச்சை கொய்யா மற்றும் சிவப்பு கொய்யா என இரு வகைகள் உள்ளன. முன்பெல்லாம், ஏராளமான நாட்டு கொய்யா மரங்கள் இருந்தன.ஆனால் இப்போது கலப்பின கொய்யா பழங்கள்தான் அதிகம் விற்பனையாகின்றன.

கொய்யா மரம் வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகமாக வளரும். கொய்யா மரத்தின் பழம், கொய்யா இலைகள், கொய்யா வேர்கள் மற்றும் கொய்யா பூக்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.


ஹார்மோன் சமநிலையின்மைக்கு சிகிச்சையளிக்க வேகவைத்த கொய்யா இலைகளை குடிக்கலாம். இரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்ற கொய்யா பழத்தை உட்கொள்ளலாம். இரத்த அளவை அதிகரிக்க கொய்யா பழத்தை சாப்பிடலாம்.

கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் சி, சருமம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கிறது. உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கிறது. கொய்யா பழத்தில் உள்ள நார்ச்சத்து, நீரிழிவு நோயின் அபாயத்தைத் தடுக்கிறது.

கொய்யாப் பழத்தை அரைத்து சாறு குடிப்பதால் தைராய்டு பிரச்சனைகள் தீரும். கொய்யா இலைகளை வேகவைத்து, வடிகட்டி குடிப்பதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாவை உட்கொண்டால், அனைத்து கழிவுகளும் வெளியேறும். அல்சர் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் கொய்யாவை அரைத்து குடித்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.

கர்ப்பிணிகள் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட வேண்டும். தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து,ஆரோக்கியமாக இருக்க கொய்யா பழத்தை சாப்பிடலாம்.உடல் சோர்வைப் போக்கி புத்துணர்ச்சியுடன் உணர கொய்யாப்பழம் சாப்பிடலாம்.

கொய்யா பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். உடல் ஆரோக்கியம் மேம்பட கொய்யா பழம் மற்றும் கொய்யா இலை பானத்தை அடிக்கடி உட்கொள்வது நல்லது.