பருவநிலை மாற்றத்தால் புகைமூட்டம் குறைய வாய்ப்பு!!

பருவநிலை மாற்றத்தால் புகைமூட்டம் குறைய வாய்ப்பு!!

சிங்கப்பூர்: சமீப காலமாக வெப்பநிலை அதிகரித்து வருவதால் கலிபோர்னியா உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ ஏற்பட்டது.

இதனால் அருகில் உள்ள நாடுகள் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டன. அந்த வகையில் இனி வரும் காலங்களில் புகைமூட்டம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் புகை மூட்டம் குறைவாக இருக்கும். அதனை சிங்கப்பூர் சர்வதேச விவகாரங்களுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மாதங்களில் புகை மூட்டம் குறைய வாய்ப்புள்ளது எனவும் 3 காரணங்களின் அடிப்படையில் கழகம் தனது முடிவை வெளியிட்டுள்ளது.

முதலில் பருவநிலை மாற்றத்தினால் வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது.

குறிப்பாக ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் வெப்பம் குறைவாக இருக்கும்.

இந்த காலநிலை மாற்றத்தால் இந்தோனேசியாவில் காட்டுத்தீ ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

தற்போதுள்ள புகைமூட்டக் கட்டுப்பாட்டு கொள்கைகள் மற்றும் தீ கட்டுப்பாட்டு நடைமுறைகள் வலுவாக இருப்பதாலும் தீயை எளிதில் கட்டுப்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.