வேலை இழந்தோருக்கு கை கொடுக்கும் Skillsfuture ஆதரவு திட்டம்..!!

வேலை இழந்தோருக்கு கை கொடுக்கும் Skillsfuture ஆதரவு திட்டம்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட தொழிலாளர்கள் Skillfuture ஆதரவு திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

வேலை வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதார உதவியை அணுக இந்த திட்டம் உதவுகிறது.

பணிநீக்கங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொருத்தமான வேலைவாய்ப்பைக் கண்டறிய உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இந்த கட்டமைப்பு உதவுகிறது.

நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் இந்தத் திட்டம் ஒரு சரியான நேரத்தில் கை கொடுப்பதாக தொழிலாளர் இயக்கம் கூறுகிறது.

வேலை இழந்து புதிய வாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும்.

அதன் அடிப்படையில் அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

புதிய Skillfuture வேலை தேடுபவர் ஆதரவு திட்டத்தின் கீழ், வேலை தேடுபவர்கள் 6 மாதங்கள் வரை மாதத்திற்கு அதிகபட்சமாக S$6,000 பெறலாம்.

இந்தத் திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அடிக்கடி திடீர் சோதனைகள் நடத்தப்படும் என்று சிங்கப்பூர் தொழிலாளர் அமைப்பு (SLO) தெரிவித்துள்ளது.

மேலும் ஆதரவு திட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் நம்பகத்தன்மை சரிபார்க்கப்படும் என்றும் அது கூறியது.