தற்போது டெஸ்ட் அடிக்கலாமா? புதிய அப்டேட்!! இதோ!!

2025 ஆம் ஆண்டு சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பது பற்றி புதிய அப்டேட்:
இவ்வாண்டு டெஸ்ட் அடிக்க முடியுமா?என்பதை பற்றியும் ,டெஸ்ட் அடிப்பதற்கான தற்போதைய சூழ்நிலை பற்றியும் இதற்குமுன் பதிவிட்டிருந்த பதிவில் கண்டிருப்போம்.மேலும் சென்னையில் உள்ள ஒரு சில டெஸ்ட் சென்டர்களைப் பற்றியும் தகவலை பகிர்ந்தோம்.நீங்கள் அப்பதிவை படிக்கவில்லை என்றால் ,கீழே அதன் லிங்க் கொடுத்துள்ளோம் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிப்பதற்கு நிறைய institute-கள் உள்ளன.
இப்போது அந்த institute-களில் அட்மிஷன் நடைபெறவில்லை என்றும் ஏப்ரல் மாதத்திற்கு மேல் அட்மிஷன் நடைபெறலாம் என்றும் கூறினர்.
டெஸ்ட் அடிப்பதற்கான கோட்டா குறைவாகத்தான் இருக்கிறது.
சென்ற வருடத்தை விட இந்த வருடம் கோட்டா குறைவாக இருப்பதாக கூறினர்.
ஒரு சில சப் ஏஜெண்டுகள் டெஸ்ட் அடிப்பதாக கூறி அதிகப்படியான பணத்தை வாங்கி ஏமாற்றி விடுகிறார்கள்.
நீங்கள் ஏமாறாமல் இருக்க institute-க்கு
சென்று நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு தற்போது டெஸ்ட் அடிக்கலாமா? என்பதை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
ஏப்ரல் மாதம் வரை அட்மிஷன் போடுவதில் சிரமம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல சென்ற வருடம் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் ஆன்லைன் மூலம் உங்கள் பெயரை ரெஜிஸ்டர் செய்து கொள்வதற்கான வசதி இருந்தது. ஆனால் இப்போது அந்த வசதியும் இல்லை.இப்போது புதிதாக அட்மிஷன் போடவில்லை.
சென்ற ஆண்டு பணம் செலுத்தியவர்கள் மட்டுமே டெஸ்ட் அடிப்பதற்காக செல்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சி அளித்து வெளிநாட்டிற்கு அனுப்பி கொண்டு இருக்கிறார்கள்.
முதலில் இன்ஸ்டிடியூட்டில் அட்மிஷன் செய்துவிட்டு உங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்துவிட்டு நீங்கள் ஏதாவது ஒரு பர்மீட்டில் வெளிநாடு சென்றுவிடலாம்.
ஏதாவது ஒரு பர்மீட்டில் வெளிநாடு சென்று அங்கு வேலை எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு உங்களுக்கு அந்த வேலை செட் ஆகிவிட்டால் அதை தொடர்ந்து செய்யலாம்.அல்லது நீங்கள் டெஸ்ட் அடித்து தான் செல்ல வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் வெளிநாட்டு சென்ற பிறகு டெஸ்ட் அடிப்பதற்கான அழைப்பு வந்தால் திரும்பி வந்து டெஸ்ட் அடியுங்கள்.
நீங்கள் வெளிநாடு சென்றவுடன் டெஸ்ட் அடித்துக் கொள்ளலாம் என்று கூறி உங்களிடம் பணம் கேட்டால் செலுத்தாமல் இருப்பது நல்லது.ஏனென்றால் ஏமாற்றக் கூட வாய்ப்பு இருக்கலாம்.
தற்போது வரை புதிதாக அட்மிஷன் எடுக்கவில்லை.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan