சிங்போஸ்ட் அதிகாரிகளின் திடீர் பணிநீக்கம்…!!! நிறுவன பங்குகளின் விலை சரிவு….!!!

சிங்போஸ்ட் அதிகாரிகளின் திடீர் பணிநீக்கம்...!!! நிறுவன பங்குகளின் விலை சரிவு....!!!

சிங்கப்பூர்: சிங்போஸ்ட் மூத்த நிர்வாகிகளை நீக்கியது முதலீட்டாளர்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்போஸ்ட்டின் பங்குகள் இன்று சுமார் 9 சதவீதம் குறைந்து 51 காசுக்கு விற்பனையானது.

வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) அதன் விலை சுமார் 56 காசாக இருந்தது.

ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் அலட்சியமாக நடந்து கொண்டது தெரியவந்ததால் சிங்போஸ்ட் மூன்று மூத்த அதிகாரிகளை நேற்று (டிசம்பர் 22) பணி நீக்கம் செய்தது.

குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி வின்சண்ட் பாங், தலைமை நிதி அதிகாரி வின்சண்ட் யிக், சர்வதேச வர்த்தகப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி லி யூ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இ-காமர்ஸ் சர்வதேச பேக்கேஜ்களை கையாளுவதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று அதிகாரிகளும் உரிய ஆதாரம் இல்லாமல் திருத்தம் செய்ய அனுமதித்துள்ளது தெரியவந்தது.

அவர்கள் மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிங்போஸ்ட் பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்ட இருவர் கடும் எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றனர்.