இன்ஸ்டாகிராமில் சிங்கப்பூரின் SGSecure இயக்கம்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தேசிய இயக்கமான SGSecure பயங்கரவாத தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து வைத்துகொள்ள அமைத்த ஒரு இயக்கமாகும். எனவே இது பொதுமக்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் என்று உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே. சண்முகம் தெரிவித்தார்.
இந்த SGSecure இயக்கமானது 2016ல் பிரதமராக இருந்த லீ சியென் லூங்கால் தொடங்கப்பட்டது. இது பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க சிங்கப்பூரர்களுக்குப் பயிற்சியளிக்க உதவுகிறது.
மேலும் இந்த இயக்கம் இக்கட்டான சூழ்நிலையில் ஏற்படும் நெருக்கடியைக் கையாளும் திறன்களை வளர்க்க பொதுமக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
உள்துறை அமைச்சகம் (MHA) SGSecure இன்ஸ்டாகிராம் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் SGSecure மொபைல் செயலியில் செய்யப்பட்ட சமீபத்திய புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொண்டது.
உள்துறை அமைச்சகமும் (MHA) மற்றும் படைப்பு நிறுவனமான VML சிங்கப்பூரும் இணைந்து ‘Foiled Ones More’ என்ற புதிய இசை வீடியோவை உருவாக்கியுள்ளன.
அத்தகைய முயற்சிகளில் ஒன்றாக உள்ளூர் கலைஞர் நாதன் ஹர்தோனோவின் வீடியோவானது, பயங்கரவாதத்தின் ஆபத்துகள் மற்றும் மிரட்டலுக்கு எதிராக பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.
இந்த வீடியோ பதிவில் பல்வேறு சமூக தகவல்களும், தீவிரவாதத்திற்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்த முக்கிய அறிவிப்புகளை பொது மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் அமைந்திருந்தது.
Follow us on : click here