சிங்கப்பூர் வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் கத்தார் பயணம்!

இன்று முதல் 7-ஆம் தேதி வரை வெளியுறவு,தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் கத்தார் தலைநகர் டோஹாவில் இருப்பார்.

இவர் அங்கு நடக்கவிருக்கும் 5-வது கருத்தரையில் பங்கேற்பதற்காக செல்கிறார்.

குறைந்த வளர்ச்சி அடைந்த நாடுகள் குறித்த ஐக்கிய நாட்டின் நிறுவனத்தின் 5-வது கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

விவாதத்தின் போது சிங்கப்பூரின் தேசிய அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார்.

2030-க்குள் வசதி குறைந்த நாடுகளின் உறுதியான, ஒன்றிணைந்த நடவடிக்கைகள் மூலம் நீடித்த வளர்ச்சியைச் சாதிப்பதே உலக நிறுவனத்தின் இலக்கு.

அதற்கான சிங்கப்பூரின் கடமையை விவாதத்தின் போது அமைச்சர் எடுத்துரைத்து பேசுவார்.

அமைச்சருடன் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகளும் டோஹா செல்வர்.