சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டரங்கம்!! விரைவில்.....
சிங்கப்பூரில் உள்ள தோ பாயோ பகுதியில் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த நிலையம் புதிதாக வரவுள்ளது.
அந்த நிலையத்தில் விளையாட்டு மைதானம்,நூலகம், சுகாதாரப் பராமரிப்பு வசதிகள்,பூங்கா,உள் விளையாட்டு நிலையம்,உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள் என பல்வேறு அம்சங்களுடன் அதிநவீன வசதிகளுடன் ஒரே கூடாரத்தின் கீழ் அமைக்கப்படும்.
சுமார் 10000 பேர் வரை அமரக்கூடிய அளவில் விளையாட்டு மைதானம் இருக்கும்.
இந்த நிலையம் சிங்கப்பூரின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டு அரங்கமாக விளங்கும்.
நிலந்திருத்தும் நிகழ்ச்சியில் கலாச்சார,சமூக,இளைஞர் துறை அமைச்சர் எட்வின் தோங் கலந்து கொண்டார்.
இந்த புதிய நிலையம் பல்வேறு பின்னணியில் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் என நம்புவதாக அவர் கூறினார்.
Follow us on : click here