சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி மணியம் காலமானார்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் கலை உலகில் புகழ்பெற்ற கலைஞர் ஸ்ரீமதி உஷாராணி காலமானார்.
அவருக்கு வயது 76.
பாஸ்கரின் அகாடமி ஆஃப் டான்ஸில் பட்டம் பெற்ற இவர், இளம் வயதிலேயே பரதத்தில் அபார திறமையுடன் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டார்.
பல ஆண்டுகளாக பரதநாட்டியத் துறையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஸ்ரீமதி உஷாராணி பல நடன ஆசிரியர்களையும் மாணவர்களையும் உருவாக்கிய பெருமைக்குரியவர்.
1971 இல், அவர் ‘நடனக் கலைஞர்களின் ஜூவல்’ என்ற பட்டத்தைப் பெற்றார்.
பினாங்கு மேயரிடம் இருந்து தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
ஶ்ரீமதி உஷாராணி சிங்கப்பூரின் தேசிய நடன நிறுவனத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.
மரியாதைக்குரிய பரத ஆசிரியர் மற்றும் நடனக் கலைஞரான அவர், சிங்கப்பூர் இளைஞர் விழாவிற்கு பல மாணவர்களைத் தயார்படுத்தியுள்ளார்.
சிவ உற்சவம், சகுந்தலா, நட்பு, நவ நர்த்தனம் போன்ற குறிப்பிடத்தக்க நாட்டிய நாடகங்களையும் கற்பித்த பெருமை இவரைச் சேரும்.
ஶ்ரீமதி உஷாராணி கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி அவருக்கு மதிப்புமிக்க விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்று Apsaras Arts வழங்கும் ‘நாட்டிய ஆச்சார்யா மணி’ விருது.
ஶ்ரீமதி உஷாராணி மணியம்,பரத கலைத் துறையில் சிங்கப்பூருக்கு ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில்,ஏப்ரல் 2024 இல் சிங்கப்பூரின் Indian Hall of Fameஇல் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது இழப்பு சிங்கப்பூர் கலைத் துறைக்கு பேரிழப்பாக உள்ளது என்று கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
அவரது இறுதிச்சடங்கு நாளை (மார்ச் 5) பிற்பகல் 2.45 மணிக்கு மண்டாய் மயானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan