சிங்கப்பூரின் பிரதமர் பதவி விலகுகிறார்!! அடுத்த பிரதமர் யார்?

சிங்கப்பூரின் பிரதமர் பதவி விலகுகிறார்!! அடுத்த பிரதமர் யார்?

சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமர் லீ சியென் லூங் தனது பிரதமர் பதவியிலிருந்து விலக உள்ளார்.வரும் 15-ஆம் தேதியன்று பதவி விலகுவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் அலுவலகம் ஏப்ரல் 15-ஆம் தேதி(இன்று) வெளியிட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டுகள் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கும், சிங்கப்பூருக்கும் தனது பங்கை அளித்துள்ளார்.

அவர் தனது 72 வயதில் பதவியிலிருந்து விலக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் 2004 முதல் 2024 வரை தனது பங்கை சிங்கப்பூருக்கு அளித்து வழிநடத்தினார்.

அடுத்த பிரதமராக, துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக மே 15-ஆம் தேதி இரவு 8 மணியளவில் இஸ்தானாவில் லாரன்ஸ் வோங் பதவியேற்பார்.