சிங்கப்பூர் அதிபர் Halimah Yacob லண்டனில் பிரிட்டிஷ் மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட பின்னர், சிங்கப்பூரும்,பிரிட்டனும் ஒத்துழைப்புக்கான புதிய அம்சங்களைத் தொடர்ந்து ஆராயும் என்று தெரிவித்தார்.
அதோடு, இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக குறிப்பிட்டார்.
விழா முடிந்த பிறகு, CNA விடம் பேசினார்.
இருநாடுகளும் மக்கள் தொடர்பு, வர்த்தக,முதலீட்டு இணைப்புகள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளும் முக்கிய பங்காளிகள் என்றார்.
லண்டனில் சுமார் 200 சிங்கப்பூரர்களுடன் விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் சிங்கப்பூர் அதிபர் Halimah Yacob கலந்து கொண்டார்.
விருந்து நிகழ்ச்சியில் பிரபல சீனப் பாடகர் JJ லின்னும் கலந்து கொண்டார்.
அவர்கள் சிங்கப்பூருடன் தொடர்பில் இருக்கும்படியும்,அடுத்த அத்தியாயத்திற்கு அவர்களின் பங்கை அளிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.