சிங்கப்பூரின் 'ஒலாம்' நிறுவனத்திற்கு $4.2 மில்லியன் அபராதம் விதிப்பு...!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘ஒலாம்’ குழுமத்திற்கு பருத்தி விற்பனை குறித்து தாமதமாகத் தெரிவித்ததற்காக 3.25 மில்லியன் அமெரிக்க டாலர் (S$4.2 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
‘ஒலாம்’போன்ற நிறுவனங்கள் பருத்தி விற்பனை குறித்து அமெரிக்க வேளாண் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்நிறுவனத்தின் தாமதமான அறிவிப்பு பருத்தி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் நிறுவனம் அமெரிக்க விவசாயத் துறை (USDA) மற்றும் கமாடிட்டி ஃபியூச்சர்ஸ் டிரேடிங் கமிஷன் (CFTC) ஆகியவற்றுக்கு அபராதம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டது.
2021 இல் ஐந்து பருத்தி விற்பனையை ஆசிய வாடிக்கையாளருக்கு ஒலாம் தாமதமாக அறிவித்ததாக CFTC குறிப்பிட்டது.
ஏறக்குறைய ஐந்து வாரங்களுக்குப் பிறகு, 190 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 375,000 பருத்தி மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாக ஆணையம் அறிந்தது.
ஒலாம் போன்ற நிறுவனங்கள் பருத்தி விற்பனையை USDAக்கு தெரிவிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் USDA வாராந்திர மற்றும் மாதாந்திர ஏற்றுமதி அறிக்கைகளைத் தயாரித்து வெளியிடுகிறது.
பருத்தியின் தேவையை அறிய இந்த அறிக்கைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இதுபோன்ற தாமதமான தகவல் அறிவிப்பால் பருத்தி விற்பனை குறித்து தவறான மற்றும் துள்ளியமற்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தேவை மற்றும் விநியோகத்தின் முக்கிய குறிகாட்டியான இந்த அறிக்கை அதன் நம்பகத்தன்மையை இழந்துள்ளதாகவும்,
இதனால் பொருட்களின் விலை நிர்ணயத்தில் உள்ள நியாயத்தையும் அது பாதித்ததாக CFTC கூறியது.
Follow us on : click here