13 மாத சரிவுக்கு பிறகு சிங்கப்பூரின் எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதியில் உயர்வு!!

கடந்த மாதம் சிங்கப்பூரில் எண்ணெய் அல்லாத உள்நாட்டு ஏற்றுமதி உயர்ந்துள்ளது. கடந்த 13 மாத சரிவுக்கு பின் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் ஆண்டு அடிப்படையில் ஒரு சதவீதம் ஏற்றுமதியில் உயர்ந்துள்ளது.

எலக்ட்ரானிக் பொருட்களின் ஏற்றுமதி தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

இந்த தகவல்களை Enterprise Singapore அமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் முன்னணி சந்தைகளுக்கான எண்ணெய் அல்லாத உள்ளூர் ஏற்றுமதி சரிந்ததாக தெரிவித்தது.அதில் தைவான், ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.