சிங்கப்பூரின் புதிய உட்லண்ட்ஸ் ஹெல்த் ஹாஸ்பிடல்!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் புதிய உட்லண்ட்ஸ் ஹெல்த் வளாகத்தில்,
சிகிச்சை பெறுவதற்கு குறைந்த வயதுடைய நோயாளிகளின் எண்ணிக்கை சமீப காலமாகவே அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
அவர்களில் பலர் தீராத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் சேவைகளை வழங்கி வந்த உட்லண்ட்ஸ் சுகாதார வளாகம் ஜூலை 13 அன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
உட்லண்ட்ஸ் பகுதியைச் சுற்றி இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த வளாகத்தின் தலைமை இயக்க அதிகாரி டாக்டர் வோங் கிர்க் சுவான் கூறுகையில், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களால் பலர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருகிறார்கள் என்று கூறினார்.
மேலும் நோயாளிகளுக்கு நோயின் தீவிரம் அதிகரிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முயல்வதாக கூறினார்.
வளாகத்தில் உள்ள தொழில்நுட்ப வசதிகள் நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்க உதவியாக உள்ளது.
இதனால் பணியாளர் பற்றாக்குறையையும் எளிதாகக் கையாள முடியும் என்று டாக்டர் வோங் கூறினார்.
புதிய வளாகத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வழிகளும் தொடர்ந்து ஆராயப்பட்டு வருகின்றன.
Follow us on : click here