இன்று அதிகாரபூர்வமாக மண்டாய் Bird Paradise திறக்கப்பட்டுள்ளது.
முதலில் சென்ற 8 பேருக்கு Bird Paradise – இன் அன்பளிப்பு பைகளும்,ஓராண்டு இலவச உறுப்பியமும் வழங்கப்பட்டன.
திறந்தவெளி அரங்கு சுமார் 200 பேர் அமரகூடிய அளவில் இருக்கும். அந்த அரங்கில் தினமும் 2 நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சுமார் கால் மணி நேரம் ஒவ்வொரு நிகழ்ச்சியும் நீடிக்கும்.
உலகின் வெவ்வேறு சூழல்களைப் பிரதிபலிக்கும் தனித்துவமான 8 பறவைத் தோட்டங்கள் உள்ளன.
இன்று முதல் 26-ஆம் தேதி வரை பெரியவர்களுக்கும்,சிறியவர்களுக்கும் நுழைவுச்சீட்டுகளில் 10 வெள்ளி தள்ளுபடி கிடைக்கும்.
புதிய Bird Paradise நாள்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.