சிங்கப்பூரின் கடற்படை நிர்வாகிக்கு வழங்கப்பட்ட நீண்ட காலச் சேவைக்கான பதக்கம்..!!!

சிங்கப்பூரின் கடற்படை நிர்வாகிக்கு வழங்கப்பட்ட நீண்ட காலச் சேவைக்கான பதக்கம்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கடற்படை நிர்வாகியான சுமதி 25 ஆண்டுகால தனது சேவைக்காக இவ்வாண்டு நீண்ட காலச் சேவைக்கான பதக்கம் வென்றுள்ளார்.

மெட்டீரியல் மேனேஜ்மென்ட் துறையில் ஒரு நிர்வாகியாக பணிபுரியும் அவர், தனது பங்களிப்பு மற்றும் அங்கீகாரம் மற்ற ஊழியர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் ஊக்கமளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சகம் ஆயுதப்படையைச் சேர்ந்த 918 உறுப்பினர்களுக்கு சிறந்த சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக பதக்கங்களை வழங்கி கவுரவித்தது.

நவம்பர் 28 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வை பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென், பாதுகாப்பு மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இராணுவம் மற்றும் ராணுவம் சாராத வீரர்களுக்கு மொத்தம் 161 பாராட்டு பதக்கங்கள், 161 செயல்திறன் பதக்கங்கள் மற்றும் 618 நீண்ட காலச் சேவை பதக்கங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, நவம்பர் 3 ஆம் தேதி, பொது நிர்வாகப் பதக்கம் (தங்கம்) (இராணுவம்) உளவுத்துறைத் தலைவரும், ராணுவப் புலனாய்வு இயக்குநருமான மேஜர் ஜெனரல் லீ யி ஜின்னுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் ஆயுதப் படையின் 14 அதிகாரிகளுக்கும் 9 பாதுகாப்பு அமைச்சர்களுக்கும் பொது நிர்வாகப் பதக்கம் (வெள்ளி) வழங்கப்பட்டது.

33 சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரிகள் மற்றும் 20 பாதுகாப்பு அமைச்சகப் பணியாளர்கள் பொது நிர்வாகப் பதக்கம் (வெண்கலம்) பெற்றனர்.