வரும் ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரின் தேசிய சின்னமான Cathay கட்டடம் தற்காலிக மாக மூடப்படும்.
புதுப்பிப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படும்.
Cathay கட்டடம் கடைசியாக 2003-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
சுமார் 1.5 ஆண்டு காலம் புதுப்பிப்புப் பணிகள் நிறைவு பெற ஆகலாம்.
இது அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் மீண்டும் திறக்கப்படும்.இவ்வாறு Cathay நிறுவனம் பிப்ரவரி 17-ஆம் தேதி (நேற்று) அறிவித்தது.
அங்கு கடை வைத்து இருக்கும் வாடகைதாரர்கள் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்குள் கட்டடத்திலிருந்து வெளியேறுவார்கள் என்றும் கூறியது.
புதுப்பிப்புப் பணிகளால் The Cathay Residences- இல் 6-ஆம் தளத்திலிருந்து 17-ஆம் தளம் வரை வீடுகளில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
அவர்கள் கட்டடத்தில் நுழைய Mount Sophia வில் உள்ள தனிப்பட்ட நுழைவாயில் வழியாக நுழையலாம் என்றும் தெரிவித்தது.
1939-ஆம் ஆண்டில் Cathay கட்டடம் கட்டப்பட்டது.