தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மீண்டும் கேட்டுக் கொண்ட சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்!!
சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று சம்பவங்கள் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.எனினும் அதன் எண்ணிக்கை இன்னும் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 9-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நிலவரப்படி கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 12,600.இது ஒரு வாரத்தில் பதிவான பதிவு.இதற்கு முந்தைய வாரத்தில் 16,800 ஆக பதிவாகி இருந்தது.
நோய் தொற்றால் மோசமான பாதிப்புக்கு ஆளாகுவதற்கு முன் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும்,மோசமாக பாதிப்பு ஏற்படாமல் தடுக்க போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடப்படும் நிலையங்களின் இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் குறைந்தது 30 நடமாடும் தடுப்பூசி குழுக்கள் மக்களைச் சந்திக்கும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் கோவிட்-19 தொற்று சம்பவம் உச்சத்தை தொட்டது.
அதன் பிறகு அதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று அமைச்சகம் கூறியது.
Follow us on : click here