சிங்கப்பூரின் நிதி அமைச்சகம் 2025 வரவு செலவுத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு…!!

சிங்கப்பூரின் நிதி அமைச்சகம் 2025 வரவு செலவுத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் நிதி அமைச்சகம் வரவிருக்கும் பட்ஜெட் 2025 குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது.

எனவே பொதுமக்கள் கருத்துக்களை தனிநபர்கள், வர்த்தகங்கள்,அமைப்புகள் போன்றவை 2024 டிசம்பர் 2 ஆம் தேதியிலிருந்து 2025 ஜனவரி 12ஆம் தேதி வரை கருத்துக்களை முன் வைக்குமாறு அமைச்சகம் வலியுறுத்துகிறது.

மேலும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக 9 ஜனவரி 2025 அன்று காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒன் ராஃபிள்ஸ் பிளேஸில் ரீச் அமைப்பானது கருத்து தெரிவிக்கும் நிகழ்வை நடத்துகிறது.

SG60 உடன் இணைந்து சிங்கப்பூரை மேம்படுத்துவதற்கும்,துடிப்பான வணிகச் சூழலை உருவாக்குவதற்கும், ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும், அவர்களின் தொழில் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும் இணைந்து பணியாற்றுதல் போன்ற பல்வேறு கட்டங்களில் இருக்கும்.

அடுத்த ஆறு வாரங்களுக்கு, சிங்கப்பூரர்களை ஆதரிப்பது போன்ற கருப்பொருள்களில் சிங்கப்பூரர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்.