Singapore News in Tamil

சிங்கப்பூரில் உற்பத்தி துறை சரிவு!

சிங்கப்பூரில் உற்பத்தி துறையின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு கடந்த மாதம் 49.5 விழுக்காடாக சரிந்தது.

50 விழுக்காட்டுக்கும் கீழே சரிந்திருப்பது துறையின் சுருக்கத்தைக் குறிக்கிறது.

தொழிற்சாலைகளில் பெரிய நாடுகள் வாங்குவதை குறைத்துவிட்டதால் அதிக நடவடிக்கைகள் இல்லை.

குறிப்பாக மின்னியல் துறை பத்தாவது மாதமாக தொடர்ந்து சுருங்கியது.

இப்போதைக்கு நிலைமை மாற வாய்ப்பு இல்லை என்று ஒரு பொருளாதார நிபுணர் குறிப்பிட்டார்.

உற்பத்தி துறையில் ஐரோப்பா, அமெரிக்கா,சீனா ஆகிய நாடுகள் சுருங்கி வருவதையும் அவர் குறிப்பிட்டார்.