பாரீஸ் பாராலம்பிக் போட்டியில் சாதனை படைத்த சிங்கப்பூர் சிங்கப்பெண்!!

பாரீஸ் பாராலம்பிக் போட்டியில் சாதனை படைத்த சிங்கப்பூர் சிங்கப்பெண்...!!!

சிங்கப்பூர்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன.

சிங்கப்பூரின் யிப் பின் சியூ பெண்களுக்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் எஸ் 2 பிரிவின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தேர்வுச் சுற்றில் 11 போட்டியாளர்களில் யிப் முதலாவதாக வந்தார்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 2 நிமிடம் 18.19 வினாடிகள் ஆகும்.

அடுத்த இடத்தைப் பிடித்தவரின் நேரத்தை விட இது கிட்டத்தட்ட 4 வினாடிகள் குறைவாக இருந்தது.

நடப்பு சாம்பியனான யிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்ததைப் போலவே அவர் 2 நிமிடம் 21.73 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

பாராலிம்பிக் போட்டியில் அவர் வெல்லும் ஆறாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

இந்த போட்டியில் மெக்சிகோ வெள்ளியும், இத்தாலி வெண்கலமும் வென்றன.

2016 மற்றும் 2020 பாராலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூருக்காக தங்கம் வென்றுள்ளார்.

யிப் பின் சியூ ஆகஸ்ட் 31 நடைபெறவுள்ள 50 மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் போட்டியில் பங்கேற்கிறார்.