தனிநபர் தகவல் பாதுகாப்பு வார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கப்பூர் தகவல்,மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர்!!

தனிநபர் தகவல் பாதுகாப்பு வார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிங்கப்பூர் தகவல்,மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர்!!

சிங்கப்பூர்: செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தகவல் மற்றும் மின்னணு மேம்பாட்டு அமைச்சர் திருமதி. ஜோசபின் தியோ கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமானது ஒருவரின் விவரத்தை பயன்படுத்தி அவரைப் போலவே எழுதவும் பேசவும் வைக்க முடியும். மேலும் ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் கூட எளிதில் மோசடி கும்பலால் கைப்பற்றப்படும். இது ஒருவரின் குரலை படித்து அப்படியே அவர்களைப் போலவே பேசும் ஆற்றல் கொண்டதால் குற்றவாளிகள் கூட தப்பிக்க வாய்ப்புண்டு. மேலும் நிரபராதிகள் கூட தண்டிக்கப்பட வாய்ப்புண்டு.

செயற்கை நுண்ணறிவு மனிதனைப் போலவே சிந்திக்கும் செயல்படும் திறன் கொண்டதால் பல்வேறு நிறுவனங்களில் இதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவற்றால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான பாதுகாப்பு குறித்தும் சிங்கப்பூர் அரசு தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

அந்த வகையில் தனிநபர் தகவல் பாதுகாப்பு வார விழாவில் அவர் தொடக்க உரையாற்றியபோது ,தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான திருட்டு அபாயத்தைக் குறைப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கத் தவறினால், பயனர்கள் மற்றும் நிறுவனங்களுடன் நம்பிக்கையை வளர்ப்பது கடினமாகிவிடும் என்று கூறியுள்ளார்.

இத்தகைய சவால்களைச் சமாளிப்பதற்கான சிங்கப்பூரின் அணுகு முறையானது உரிய நேரத்தில் சிறப்பாக செயல்படக் கூடியதாக இருக்கும் என்று திருமதி தியோ கூறினார்.

 

Follow us on : click here ⬇️