சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!!

சிங்கப்பூரின் மிக வெப்பமான ஆண்டு -2024!!

கடந்த 2024 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு வருடாந்திர சராசரி வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸாக இருந்தது.இதனை சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதே போன்ற நிலை 2019 ஆம் ஆண்டிலும் 2016 ஆம் ஆண்டிலும் ஏற்பட்டது.

ஆய்வகம் வெளியிட்ட வருடாந்திரப் பருவநிலை மதிப்பீட்டு அறிக்கையில் ,ஆண்டின் சில நேரங்களில் வெப்பநிலை புதிய உச்சங்களைத் எட்டியதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் ஒவ்வொரு மாதமும் நீண்டகால சராசரி வெப்பநிலைக்கு சமமாக அல்லது அதற்கேற்ப வெப்பமாக இருந்தது.

கடந்த ஆண்டு முழுவதும் சுமார் 2700 மில்லிமீட்டர் மழை பெய்தது.

ஆண்டு சராசரி மொத்த மழைப்பொழிவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு அன்றாட மழைப்பொழிவு ஜூலை மாதம் 18 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 1 மில்லிமீட்டருக்கு குறைவாக பதிவாகியுள்ளது.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு நாட்டின் முதல் வறட்சிக் காலம் இது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.