பசுபிக் தீவு நாடுகளை புதிய கடல் சட்ட ஒப்பந்தத்தில் இணைய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தல்!!

பசுபிக் தீவு நாடுகளை புதிய கடல் சட்ட ஒப்பந்தத்தில் இணைய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தல்!!

சிங்கப்பூர்: கடல் சட்டம் குறித்த ஐக்கிய நாட்டு உடன்பாட்டில் பசுபிக் தீவு நாடுகளை இணைய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பால் கடல் வாழ் உயிரினங்களையும், கடல் சூழலையும் பாதுகாக்க இந்த உடன்பாடு முயல்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த உடன்பாட்டில் கடல் பாதுகாப்பு மற்றும் கடல் தூய்மை பராமரிப்பு போன்ற கடல் சார்ந்த சுகாதார நடவடிக்கைகள் குறித்த கருத்துக்கள் பெரிதும் இடம்பெற்றிருக்கும்.

பொதுவாக கடல் பாதுகாப்பு என்பது பாதுகாப்பு உயிரியலின் துணை பிரிவாகும். கடல் சுகாதாரம் என்பது கடலில் சேதம் அடைந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல், கடல் உயிரினங்களை பாதுகாத்தல் போன்ற கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.

கடலில் வாழும் உயிரினங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருப்பதற்கும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் உடன்பாட்டில் இணைவது அவசியமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பசுபிக் அமைச்சர்களின் உறவை வலுப்படுத்திக் கொள்ள இந்த சந்திப்பு பெரிதும் உதவியது என்றும் கூறியிருந்தார்.