சிங்கப்பூரின் முதல் ராட்சத பாண்டா குட்டி Le Le, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் பாதியில் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்படும்.
நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வரை River Wonders பூங்காவில் இருக்கும் என்றும், அதன் பிறகு தனிமைப்படுத்தப்படும் என்றும் மண்டாய் வனவிலங்கு குழு தெரிவித்தது.
Le Le-வின் தாய் Kai Kai மற்றும் தந்தை Jia Jia, தொடர்ந்து சிங்கப்பூரிலேயே இருக்கும் என்றும், அதற்கான ஒப்பந்தம் 2022-ல் கையெழுத்தானது என்றும் அது கூறியது.
இந்த பாண்டா குட்டி, தானாகவே தாயிடமிருந்து விலகி, தனித்து செயல்படத் தொடங்கியதாகவும், அதன் தாயும், குட்டியை தவிர்க்கும் நடவடிக்கைகளை காட்டத் தொடங்கியதாகவும் அது குறிப்பிட்டது.
அக்டோபர் மாதம் 6ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை River Wonders க்கு செல்ல, ஒரு பெரியவர் மற்றும் ஒரு சிறியவருக்கு நுழைவு கட்டணத்தில் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று வனவிலங்கு குழு அறிவித்தது.
மண்டாய் வனவிலங்கு குழுவினர் மற்றும் சீன நிபுணர்கள், தடுப்பூசிகள் மற்றும் சுகாதார மதிப்பீடுகள் மூலம் இந்த பாண்டா குட்டி தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய தொடர்ந்து பணியாற்றுவார்கள் என தெரிவித்தனர்.