சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ நூற்றாண்டை கொண்டாட பல நிகழ்ச்சிகளும் கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மனிதவள அமைச்சர் Tan See Leng கூறினார்.
அதேபோல் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படும்.
லீ குவான் யூ சிங்கப்பூரின் முதல் பிரதமர் ஆவார். ஆளும் மக்கள் கட்சியைத் தோற்றுவித்த தலைவர்களுள் இவரும் ஒருவர்.
இவர் 1923-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி பிறந்தார். இவர் தனது 91 வயதில் மறைந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி இந்த உலகை விட்டு பிரிந்தார்.
பிப்ரவரி,7-ஆம் தேதி (நேற்று) நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் மனித வள அமைச்சர் Tan See Leng கூறினார்.
லீ குவான் யூக்காக அஞ்சலி செலுத்தும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு சில அரசாங்க அமைப்புகள் திட்டமிட்டு வருவதாகவும் கூறினார்.
இவ்வாண்டின் பிற்பகுதியில் சிறப்பு நாணயம் வெளியிடப்படும்.லீ யின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் வகையில் சிங்கப்பூர் நாணய வாரியம் சிறப்பு நாணயத்தை வெளியிடவிருக்கிறது.
தேசிய மரபுடைமைக் கழகம் விரிவான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதில், சிங்கப்பூர் வரலாற்றின் முக்கிய தருணங்களைக் கொண்டாடும் வகையில் இடம்பெறும்.
இந்த கண்காட்சி தேசிய அருங்காட்சியத்தில் நடைபெறும்.