“சிங்கப்பூரின் பொருளாதாரம் 2025ல் சீராக வளர்ச்சி அடையும்”-MAS

“சிங்கப்பூரின் பொருளாதாரம் 2025ல் சீராக வளர்ச்சி அடையும்”-MAS

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியானது, இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் 2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரையிலான முன்னறிவிப்பு வரம்பிற்கு மேல் வரக்கூடும் என சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.

உலகப் பொருளாதாரம் 2025 இல் சீராக வளர்ச்சியடையும் என சிங்கப்பூர் நாணய வாரியம் எதிர்பார்க்கிறது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் பணவீக்கம் தொடர்ந்து மிதமாக இருந்தபோதிலும், உலகளாவிய அரசியல் நிலைமை கவலைக்குரியதாகவே உள்ளது.

உலகளாவிய தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றம் மற்றும் நிதித் துறையின் ஆதரவின் காரணமாக சிங்கப்பூரின் பொருளாதாரம் தொடர்ந்து வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் பதட்டங்கள் உலக வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றும், விலைகள் தொடர்ந்து உயரும் என்றும் நாணய வாரியத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் பற்றிய கணக்கெடுப்பு காட்டுகிறது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரால் ஆசிய நாடுகள் இன்னும் பாதிக்கப்படவில்லை.

சீனா தொடர்ந்து வியட்நாம் மற்றும் மலேசியாவிற்கு மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

ஆசியான் மற்றும் இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா தொடர்ந்து பொருட்களை வாங்குகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி உயர்வின் தாக்கம் குறைவதால், பணவீக்கமானது அடுத்த ஆண்டு சராசரியாக 1.5 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக உலகப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டால், அது விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

மேலும் உள்நாட்டு பணவீக்கம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.