MTI வெளியிட்டுள்ள சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகள்…!!!

MTI வெளியிட்டுள்ள சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்புகள்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இந்த ஆண்டு வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற முன்னறிவிப்பை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

ஒன்று முதல் மூன்று சதவீதம் வரை வளர்ச்சி இருக்கும் எனக் கூறிய முந்தைய மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய நாடுகளிலும் வெளிநாட்டு தேவைகளிலும் அதிக மாற்றம் காணப்படவில்லை.

முக்கிய கூட்டாளிகளுடன் இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நிதி மற்றும் காப்பீட்டுத் துறையின் வளர்ச்சியானது,உயர்ந்த வர்த்தக நடவடிக்கைகளால் உந்தப்பட்டது. வங்கிகள் மற்றும் நிதி மேலாளர்களிடையே நிகர கட்டணங்கள் மற்றும் கமிஷன்கள் வலுவான வளர்ச்சியைக் கண்டன என்று MTI தெரிவித்துள்ளது.

இதற்கு நேர்மாறாக, சில்லறை வர்த்தகம் மற்றும் உணவு மற்றும் பான சேவைகள் துறைகள் சுருங்கியது. ஓரளவு உள்ளூர்வாசிகள் தங்கள் செலவினங்களை வெளிநாட்டு பயணத்திட்டங்களுக்கு செலவிடுவதால் வளர்ச்சி குறைந்துள்ளது என்று அமைச்சகம் கூறியது.

இருப்பினும் இந்த ஆண்டு முக்கிய பொருளாதாரங்களுக்கிடையில் நடந்து வரும் வர்த்தக உராய்வுகளால் எழும் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மைகள் கடும் சவாலாக இருப்பதாகக் கூறியது.

இதனால் போட்டித்தன்மை வாய்ந்த வர்த்தகச்சூழல் ஏற்பட வாய்ப்புண்டு.இது NODX முன்னறிவிப்புக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக நிறுவனம் கூறியது.

மேலும் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளின் வளர்ச்சியும் மிதமானதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan