சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு நடத்திய அதிரடி சோதனை!! மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்!!
சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிரடி சோதனையை நடத்தினர்.சுமார் 4590 போதைக்கு அடிமையானவர்கள் எடுத்து கொள்ளும் அளவிற்கு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 1 மில்லியன் வெள்ளிக்கும் மேல்.
இதன் தொடர்பாக 3 ஆண்களும் ஒரு பெண்ணும் ஜனவரி 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 25 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் .
நான்கு பேரும் சிங்கப்பூரர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
31508 கிராம் அபின்(Heroin),2164 கிராம் ஐஸ் (Ice),சுமார் 32.8 கிராம் கஞ்சா,877 கிராம் Ketamine,332 கிராம் Ecstasy,1520 Erimin-5 மாத்திரைகள்,சில Ecstasy மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அபின்,250 கிராம் Methamphetamine அல்லது 500 கிராம் மேல் கஞ்சாவை கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.
Follow us on : click here