Singapore news

சிங்கப்பூரில் தொடர்ந்து 5-வது மாதமாக உற்பத்தி துறையில் இறக்கம்!

சிங்கப்பூரில் உற்பத்தித்துறை சென்ற மாதம் குறைவைக் கண்டுள்ளது.தொடர்ந்து 5வது மாதமாக இறக்கம் கண்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் உற்பத்தி வளர்ச்சி கண்டது. ஆனால் சென்ற மாதம் குறைந்துள்ளது.

தற்போது மின்னிலத் துறையும் இறக்கம் கண்டுள்ளது.உலகளவில் குறைந்த தேவை, மெதுவடைந்த வளர்ச்சி முதலியவற்றால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பொருளியலில் இடையூர்கள் ஏற்படுவதால் சிங்கப்பூரின் உற்பத்தித் துறைப் பாதிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.