சிங்கப்பூரின் 3 வது தலைமை பேராயர் நிக்கலஸ் சியா காலமானார்…!!!

சிங்கப்பூரின் 3 வது தலைமை பேராயர் நிக்கலஸ் சியா காலமானார்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாவது பேராயர் நிக்கலஸ் சியா காலமானார்.

அவருக்கு வயது 86.

பேராயர் சியா உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக சிங்கப்பூரின் ரோமன் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 8, 1938 இல் பிறந்த பேராயர் சியா 1964 இல் பாதிரியார் ஆனார்.

அவர் அக்டோபர் 7, 2001 அன்று கத்தோலிக்க திருச்சபையின் மூன்றாவது பேராயர் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் 18 மே 2013 அன்று, தற்போதைய பேராயர் வில்லியம் கோ விடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

கத்தோலிக்க திருச்சபையில் அவர் தலைமை பேராயராக 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

பிரதம மந்திரி லாரன்ஸ் வோங், பேராயர் சியா கத்தோலிக்க சமூகத்தில் அசைக்க முடியாத தூண் என்று பாராட்டினார்.

பேராயர் சியாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பேராயர் கோ தெரிவித்தார்.

கிறிஸ்துமஸ் திருநாளுக்கு இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் இவரின் இறப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow us on : click here ⬇️