பிப்ரவரி,6-ஆம் தேதி(நேற்று) நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் வெளிநாட்டில் இருக்கிற சிங்கப்பூரர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப வருகின்றனர்.அவர்கள் வருகையை “SG Arrival´´ பக்கத்தில் வருகைப் பதிவைப் பதிவு செய்ய வேண்டும்.
SG Arrival வருகைப்பதிவில் பல முக்கியமான கேள்விகள் கேட்கப்படும். சிங்கப்பூருக்குள் மஞ்சள் காமாலை,MERS, இபோலா போன்ற நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு இந்த பதிவு உதவும்.
அதில் அவர்கள் அண்மையில் எங்கு சென்றார்கள் என்று கேள்வியும் இருக்கும். அவர்களின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்ற விவரமும் பதியப்படும் .
முன்னதாக சிங்கப்பூருக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே இந்த வருகை பதிவில் பதியும் முறை இருந்தது.
ஆனால், தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் சிங்கப்பூரர்களும் கட்டாயம் பதிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் Ong Ye Kung அறிவித்தார்.
கிருமி பரவல் காலகட்டத்தில் சிங்கப்பூரர்களையும் இதில் சேர்க்கப் பட்டதாக அவர் கூறினார். இனி இது கட்டாயம் என்றும் கூறினார்.
யாரெல்லாம் SG Arrival வருகைப் பதிவைப் பூர்த்தி செய்யத் தேவையில்லை என்றும் கூறினார்.
நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் வருகைப் பதிவைப் பூர்த்திச் செய்ய தேவையில்லை.அதே போல் நில எல்லை வழியாக வரும் சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் இந்த வருகைப் பதிவைப் பூரத்திச் செய்ய தேவையில்லை என்றும் அமைச்சர் Ong Ye Kung கூறினார்.