Tamil Sports News Online

பில்லியன் டாலருக்குமேல் சொத்து வைத்து இருப்பவர்களுக்கான பட்டியலில் இடம்பிடித்துள்ள சிங்கப்பூரர்கள்!

சிங்கப்பூரைச் சேர்ந்த 35 பணக்காரர்கள் Forbes பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பில்லியன் டாலருக்கு மேல் சொத்து வைத்து இருப்பவர்களுக்கான பட்டியல்.

இந்த ஆண்டைக் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் எண்ணிக்கை கூடியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு 26 சிங்கப்பூரர்கள் மட்டுமே பட்டியலில் இடம்பிடித்திருந்தனர்.

Li Xiting சிங்கப்பூரிலேயே மிகப்பெரிய செல்வந்தர்.

Mindray நிறுவனத்தின் உரிமையாளர்.

அவருடைய மொத்த சொத்தின் மதிப்பு 16.3 பில்லியன் டாலர்.

அவருடைய சொத்து மதிப்பைக் கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் 1.3 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.