சிங்கப்பூரில் உயர்ந்துள்ள வருமானம்!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரர்களின் நிகர வருமானம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது அதிக ஊதியம் மற்றும் பணவீக்கத்தை குறைப்பதற்கு பங்களித்ததாக அமைச்சகம் கூறியது.
மனிதவள அமைச்சகம் இன்று (நவம்பர் 28) வெளியிட்ட ஊழியரணி பற்றிய முதற்கட்ட அறிக்கையின்படி, சிங்கப்பூரில் விலைவாசியை விட ஊதியம் உயர்ந்துள்ளது.
நிகர வருவாயின் அதிகரிப்பு என்பது ஊதியம் பெரும் அளவை வைத்து கணக்கிடப்படுகிறது.
நிகர நடுத்தர வருமானமானது 2024 இல் 3.4% அதிகரித்தது.
ஆனால் அதுவே 2023 இல் 2.2 சதவீதமாக குறைந்து காணப்பட்டது.
சம்பளம் ஈட்டக்கூடிய 20 சதவீத மக்களின் நிகர வருமானமானது 2024 இல் 4.6% அதிகரித்தும் 2023ல் 3% குறைந்தும் காணப்பட்டது.
மிகக் குறைந்த வருமானம் ஈட்டும் 20 சதவீதத்தினருக்கான வருமானம் நடுத்தர வருமானத்துடன் ஒப்பிடும்போது இன்னும் அதிகமாகிவிட்டது.
வருமான இடைவெளி குறைவது இதில் காட்டுவதாக அமைச்சகம் கூறியது.
Follow us on : click here