சைக்கிள் ஓட்டியே உலக நாடுகளை சுற்றிப் பார்த்த சிங்கப்பூரர்!! அதுவும் இத்தனை கிலோமீட்டரா?

சைக்கிள் ஓட்டியே உலக நாடுகளை சுற்றிப் பார்த்த சிங்கப்பூரர்!! அதுவும் இத்தனை கிலோமீட்டரா?

சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த ரமதான் ரஜாப் என்பவர் வித்தியாசமான வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருபவர்.

இந்நிலையில் சைக்கிளில் பயணத்தை மேற்கொள்ளும் முயற்சியாக தெம்பனேசிஸில் தொடங்கி சீனா வரை கிட்டத்தட்ட 4,800 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அனுபவங்களை அடிக்கடி பகிர்ந்து வரும் நிலையில் இந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

ரஜாப் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கி ஜூன் 28 உடன் 119 நாட்கள் ஆகிறது.

அவர் கடந்த 3 மாதங்களாக மலேசியா, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

ரஜாப் தனது சைக்கிள் பயணத்தைப் பற்றி இந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று இன்ஸ்டாகிராமில் முதன்முதலில் பதிவு செய்தார்.

இதுவரை 40க்கும் மேற்பட்ட வீடியோக்களை ஷேர் செய்துள்ளார்.

பெரும்பாலான வீடியோக்கள் 100,000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளன.

ரஜாப்பின் வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரது துணிச்சலை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.